/உள்ளூர் செய்திகள்/சேலம்/இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைஇரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
இரண்டு வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
சேலம்: சேலம் அருகே அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் மர்ம கொள்ளை கும்பல் பட்டபகலில் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
சேலம் அருகே உள்ள வீராணம் குப்பனூர் காட்டு வளவு பகுதியை சேர்ந்தவர் முனியன்(65). இவரது மனைவி பாப்பா(60). முனியனுக்கு சொந்தமாக அடுத்தடுத்து மூன்று வீடுகள் உள்ளன. இதில் இவரது மகன்கள் முத்துசாமி, முருகன், மருமகள்கள் அலமேலு, கவிதா மற்றும் பேர குழந்தைகள் வசித்து வருகின்றனர். ஏற்காட்டில் நடந்து வரும் சாலை பணிக்காக மகன்கள் மற்றும் மருமகள்கள் சென்று விட்டனர். பாப்பா கூழ் விற்பனை செய்ய சென்று விட்டார்.
முனியான் பேர குழந்தைகளை பள்ளியில் விடுவதற்காக வீட்டை பூட்டி விட்டு, மோட்டார் சைக்கிளில் சென்றார். மீண்டும் முனியன் மாலை வீடு திரும்பியுள்ளார். அடுத்தடுத்து உள்ள இரண்டு வீடுகள் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு முனியன் அதிர்ச்சி அடைந்தார். பூட்டு உடைக்கப்பட்ட வீடுக்குள் சென்று முனியன் பார்த்தார். இரண்டு வீடுகளில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 11 பவுன் தங்க நகை, 5,000 ரூபாயை மர்ம கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து வீராணம் போலீஸ் ஸ்டேஷனில் முனியன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீஸார் கொள்ளை நடந்த வீட்டுக்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். பட்டபகலில் கொள்ளையர்கள் நோட்டமிட்டு, வீட்டு பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கொள்ளை நடந்த வீட்டில் உள்ள பீரோ மற்றும் பொருட்களில் பதிவாகியுள்ள ரேகை பதிவு நகல்களை எடுத்தனர். பழைய குற்றவாளிகள் கைரேகையுடன், கொள்ளை நடந்த வீட்டில் பதிவாகியுள்ள ரேகைகள் ஒத்து போகிறதா என போலீஸார் விசாரித்து வருகின்றனர். வீடு புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை வீராணம் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.